"சூலூரையும் ஜெயித்து கொடுங்கள் 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக் காட்டுகிறோம்" : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சூளுரை

கோவை : சூலூரையும் ஜெயித்து கொடுங்கள் 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்காட்டுகின்றேன் என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவையில் சூளுரைத்துள்ளார்.


கோவை : சூலூரையும் ஜெயித்து கொடுங்கள் 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்காட்டுகின்றேன் என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவையில் சூளுரைத்துள்ளார்.



கோவை சூலூர் பகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. பொருளாளர் துரை முருகன், சூலூர் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது :- 

இந்த கூட்டத்தை பார்த்து பிரமித்து போய் இருக்கின்றேன். 1957 முதல் எத்தனையோ செயல் வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றேன். இவ்வளவு பெரிய செயல் வீரர் கூட்டத்தை இப்போதுதான் பார்க்கின்றேன். மாநாட்டை போல செயல் வீரர் கூட்டம் நடத்தப்படுகின்றது. இதற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு தலைமை கழகத்தின் சார்பில் ஒரு சல்யூட் அடிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன். இந்த கூட்டத்தை பார்த்த பின்னரும் அ.தி.மு.க.வினருக்கு நெஞ்சுரம் இருந்தால் அவர்களை உள்ளபடியே பாராட்டுவேன். 



53 ஆண்டுகள் கலைஞரின் காலடியில் அரசியல் பயின்றவன் நான். கலைஞரால் ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறியும் ஆற்றலையும், ராஜதந்திரத்தையும் பெற்றவர். அவர் உதிரத்தில் பிறந்தவர் ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு கூட சின்ன கோபம் கூட இல்லாமல் அரவணைத்து, அனைவரையும் வெல்ல வழிகாட்டியவர் ஸ்டாலின். ஸ்டாலின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக பார்த்தவன். தூக்கமே இல்லாமல் உழைக்கும் மாபெரும் தலைவர் தமிழகதிற்கு கிடைத்துள்ளார். இனி 50 ஆண்டு காலம் ஸ்டாலின் தான் தமிழகத்தை வழிநடத்துவார். இந்த தேர்தலை பொறுத்தவரையில் 36 அல்லது 37 தொகுதிகள் தளபதி கையில் வந்து விடும். ஒன்று இரண்டுக்கு மேல் அ.தி.மு.க. வராது. 3 எம்.எல்.ஏக்களுக்கு இப்போது நோட்டீஸ் கொடுத்து இருக்கின்றனர். இப்போது அவர்களை எடுக்க என்ன காரணம்..? 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு சீட்டு மட்டும்தான் கிடைக்கும் என காவல்துறை அறிக்கை கொடுத்து இருக்கின்றது. 

நடக்க இருக்கின்ற 4 சட்டமன்ற தேர்தலில் அனைத்தையும் பிடிக்க 10 ரூபாய் வாக்குக்கு கொடுப்பது என கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இறக்கி இருக்கின்றனர். நாட்டுநிலைமை அறிந்த மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள் என நினைக்கின்றேன். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் 100 சதவீதம் ஜெயிக்கும். சூலூரையும் ஜெயித்து கொடுங்கள் 25 நாட்களுக்குள் இந்த ஆட்சியை மாற்றிக்காட்டுகின்றேன். உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து இருப்பேன். ஆனால், வெடி வெடிக்கும். 

ஓ.பி.எஸ்.க்கு துணை நிற்போம் என்று மட்டும்தான் சொன்னேன். அதன் பின்னர் அவரது பதவி போனது. அவர் தியானம் செய்தார். அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொரு விதம். முதலமைச்சர் சேக்கிழாரை தெரிந்து வைத்து இருப்பதே பெரிய விசயம். அமைச்சர்களின் இந்த கூத்தெல்லாம் தேர்தலுக்கு பின்னர் முடிவுக்கு வரும். பழனிச்சாமியும், நானும் ஜோடி நாயகம். ஒரு முறை சீட்டு கேட்டு போன போது எங்கள் இருவரின் முடியை பார்த்த கலைஞர் கருணாநிதி இவங்களுக்கு முதலில் முடியை ஓட்ட வெட்டுங்கள் என தெரிவித்தார். அரசியல் அனுபவத்தின் மூலம் சொல்கின்றேன். மோடி மீண்டும் பிரதமராக வர வாய்ப்பே கிடையாது. மூன்று திங்களுக்குள் ஸ்டாலின் அரியணையில் அமருவார். ராகுல் காந்தியும் பிரதமராக அமருவார். பதவியில் அமரும் முன்னே வடநாட்டில் வரவேற்பை பெற்றுள்ளார் ஸ்டாலின், என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...