சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ஆதரவற்ற 10 பேர் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்ப்பு

கோவை : கோவையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் உள்பட 10 பேர் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.


கோவை : கோவையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் உள்பட 10 பேர் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

நேற்று மதியம் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏ.எச்.டி.யூ. ம், எஸ்.ஐ. தலைமையில் குழுவினர்கள், காந்தி புரம், x- கட் ரோடு, ஜே.எம் சிக்னல், வ.உ.சி. பார்க் ஆகிய இடங்களில் பிச்சை எடுத்த 10 பேரை ( 9 ஆண்கள், 1 பெண்) மீட்டு காப்பகத்தில் பராமரிக்க வேண்டி ஒப்படைப்பு செய்தனர். இவர்களுக்கு உணவு, உறைவிடம், உடைகள் வழங்கப்பட்டு உடன் கவுன்சிலிங் வழங்கி, தற்போது மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உறவினர்களிடம் ஒப்படைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை பி1 காவல் நிலையத்திலிருந்து எஸ்.எஸ்.ஐ. ராஜ்பாரதி, சண்முகம் (60) என்ற முதியவரை பராமரிக்க ஒப்படைப்பு செய்தார். முதியவரிடம் பேசியதில் அவருக்கு யாருமில்லை என்றும், ஆதலால் தான் காப்பகத்தில் இருந்து கொள்வதாகவும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...