திருப்பூர் : திருப்பூரில் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுஜித் (14), சேது (14), கோகுல் (16) ஆகிய மூன்று பேரும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதனிடையே, மூவரும் திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்கிழியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, மாணவர்கள் மூன்று பேரும் குளித்து கொண்டிருந்த போது, கோகுல் என்ற மாணவன் ஆழமுள்ள இடத்தில் சிக்கிக்கொண்டு, நீரில் மூழ்குவதை சக மாணவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, கோகுலை சேது என்ற மாணவன் காப்பாற்ற முயன்ற போது,இருவரும் நீரில் மூழ்கினர். நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்குவதை கண்ட உடனிருந்த சுஜித், இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களை மீட்டனர். தொடர்ந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பள்ளி மாணவன் கோகுல் 12ஆம் வகுப்பிற்க்கும், சேது என்ற மாணவன் 10 ஆம் வகுப்பிற்கும் ஒரு மாதத்தில் பள்ளியில் சேர உள்ள நிலையில், மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.