முல்லை குரூப்ஸ் நிறுவனம் மீது ரூ. 15 லட்சம் மோசடி புகார் : பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க காவல்துறை அறிவுறுத்தல்

கோவை : முல்லை குரூப்ஸ் நிறுவனத்தின் மீது 15 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : முல்லை குரூப்ஸ் நிறுவனத்தின் மீது 15 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை காவல் துணை கண்காணிப்பாளர் (பொருளாதாரம் குற்றப்பிரிவு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முல்லை குரூப்ஸ், முல்லை பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் முல்லை ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் கோவை, ஈரோடு, மேட்டூர் மற்றும் கோபி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கடந்த 24-ம் தேதி மோசடி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக, தலைமறைவாக உள்ள குறிஞ்சிநாதன், கதிர்வேல், அண்ணாதுரை, சத்திய மூர்த்தி மற்றும் அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் வரும் 29-ம் தேதி முதல், கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை சமர்பித்து நேரிடையாக புகார் தெரிவிக்கலாம், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...