பொள்ளாச்சி ரயில்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : வதந்தி பரப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவலை அளித்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி ரயில்நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவலை அளித்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் வெடிகுண்டு வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் பலியானதையடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ரயில்நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திற்கு பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார். மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதையடுத்து, சென்னை போலீசார் உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அலைபேசியில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து உடனடியாக சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அந்தத் தகவல் வதந்தி என சோதனையில் தெரியவந்தது.

பின்னர், வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல, சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...