கோவை - சென்னை எஸ்.இ.டி.சி. ஏ.சி. சொகுசு பேருந்தின் பயண விபரம்

கோவை : கோவை - சென்னை இடையிலான அதிவிரைவு ஏ.சி. பேருந்து சேவையின் பயண நேரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : கோவை - சென்னை இடையிலான அதிவிரைவு ஏ.சி. பேருந்து சேவையின் பயண நேரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக கோவை மற்றும் சென்னை இடையே நாள்தோறும் அடிப்படையில் ஏ.சி. படுக்கையுடன் கூடிய பேருந்து சேவையை தமிழக போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது. கோவை பிராந்தியத்தில் மட்டும் 4 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினமும் மாலை 6.30 மணிக்கு இயக்கப்படும் ஏ.சி. படுக்கையுடன் கூடிய பேருந்து, மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்றடைகிறது. இந்தப் பேருந்தில் பயணம் செய்ய நபருக்கு ரூ. 1,200 (முன்பதிவு கட்டணம் தவிர்த்து) வசூலிக்கப்படுகிறது.

இதேபோல, இரவு 10.25 மணிக்கு புறப்படும் மற்றொரு பேருந்து, மறுநாள் காலை 07.25 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இந்தப் பேருந்தில் பயணம் செய்ய நபருக்கு ரூ. 1,020 (முன்பதிவு கட்டணம் தவிர்த்து) வசூலிக்கப்படுகிறது.

இந்தப் பேருந்தில் பயணம் செய்ய பயண நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்பாக www.tnstc.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...