கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “எதிரி மற்றும் துரோகிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, பல போராட்டங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைக்கும திமுக தலைவர் ஸ்டாலின் ஆணவம், திமிர் அடித்து நொறுக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராகவும், சட்ட மன்ற உறுப்பினராக கூட இருக்க தகுதியற்றவர். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவை குழி தோண்டி புதைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதிமுகவினர் சூலூர் வேட்பாளர் கந்தசாமி வெற்றிக்காக பாடுபட வேணடும்” என தெரிவித்தார்.