கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கந்தசாமி, "பொங்கலூர் பழனிசாமியும், நானும் பக்கத்து தோட்டக்காரர்கள். அவர் தொழிலதிபர். கல்லூரி உரிமையாளர். பொங்கலூர் பழனிசாமி மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர். ஆனால் நான் மக்களோடு மக்களாக இருந்து மாளிகையை பார்ப்பவன். பொங்கலூர் பழனிசாமியை சாதாரணவர்கள் பார்க்க முடியாது. என்னை எளிமையாக அணுகலாம். கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் வேறுபட்டாலும், எண்ணங்கள் ஒன்றாக உள்ளது. என்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவினர் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
இடைத்தேர்லலில் பொங்கலூர் பழனிசாமி டெபாசிட் இழப்பது உறுதி. தேர்தலுக்கு பிறகு பொங்கலூர் பழனிசாமி, பெங்களூரு பழனிசாமி ஆக வேண்டும். அங்கும் அவருக்கு தொழில் உள்ளது. கருவறை முதல் கல்லறை வரை திட்டங்களை தந்த அரசு அதிமுக அரசு. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.