கோவை : காரமடை ஊராட்சிக்குட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் சாலை பிரச்சனை குறித்து பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, உதவி கோட்டப் பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சி தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள சாலை பிரச்சனைகளை சீர் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மனு எழுதப்பட்டு பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த 23ம் தேதி காலை கோட்டப் பொறியாளர் மற்றும் மேட்டுப்பாளையம் உதவி கோட்டப் பொறியாளர் ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் இந்த விவரங்கள் அனுப்பப்பட்டன. உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரியை தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய அடுத்த 3 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தார். அதே நேரம், ஊர் பொதுமக்கள் சார்பாக 5 பேர் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையை விளக்கினர். அனைத்தையும் பதிவு செய்து கொண்ட அவர், விரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.
குறிப்பாக, தற்காலிகமாக இரும்பு தடுப்பு அமைத்து தருவதாகவும் ,விரைவில் ரீட்டைனிங் வால் எனப்படும் எனப்படும் தாங்குச்சுவர் அமைத்து தருவதாகவும் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை அமைத்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்து தர கேட்டுக்கொண்டார்.