ஸ்டாலினின் கொள்ளுப்பேரனால் கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: கோவை மாவட்டம் சூவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் சூவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “சட்டமன்ற உறுப்பினராக எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செயல்பட்டார். கனகராஜ் குடும்பத்தை சேர்ந்த கந்தசாமி சூலூரில் போட்டியிடுகிறார். சூலூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைவர் உதவாக்கரை தலைவர், மக்களுக்கு பயன்படாத தலைவர் ஸ்டாலின். முதலமைச்சர் கனவில் உள்ள ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. ஸ்டாலினின் கொள்ளு பேரன் வந்தாலும் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் களம் திமுகவிற்கு மரண களமாக அமையும்” என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...