நீலகிரி : கோத்தகிரி அருகே சரக்கு லாரி ஒன்று பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து மோதியதில், நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கோத்தகிரியில் பாண்டியன் பார்க் பகுதியில் மரக்கம்பை பகுதியே சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அந்த வாகனத்திற்கு முன்பாக சாமு என்பவர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த வழியாக குளிர்பான குடோனில் இறக்க அதிக அளவில் எடை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று உள்ளது. அந்த லாரியை ராஜூ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். லாரி மேட்டில் ஏற முடியாமல் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த இரு வாகனத்தின் மீது மோதி, அந்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இழப்புத் தொகை தருவதாக லாரி உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், இழப்புத் தொகை தராமல் லாரியை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து, காருக்கு உரிய இழப்பீடு தராமல் இருக்கும் லாரி உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதிக பாரத்துடன் வந்த இந்த லாரி அதிர்ஷ்டவசமாக இந்த கார்கள் மீது மோதி நின்றது. இல்லையெனில், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்திற்குள் புகுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.