இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் : உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கோவை : இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- சூலூர் பகுதி எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வின் கோட்டையாகும். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது. வளர்ச்சி பணிகள் செய்து விட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்கிறோம். தி.மு.க. எதுவும் செய்யவில்லை. தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி தொகுதி மாறிமாறி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. கொள்கையுள்ள கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களை விமர்சனம் செய்து மட்டுமே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். ஆனால், இதை செய்தோம் என சொல்ல தி.மு.க.விடம் எதுவும் இல்லை. தி.மு.க. ஆட்சி தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே செய்தது. அற்புதமான ஆட்சியை இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். தருகின்றனர்.



அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி எளிமையான வேட்பாளர், அனைவரும் விரும்பும் வேட்பாளர் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். இடைத்தேர்தலுக்கு பிறகு உடனடியாக உள்ளாட்சி தேர்தல் வரும். சூலூரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி, ஒரு இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் நமக்கு பெருமை. கந்தசாமி மட்டுமே வேட்பாளர் அல்ல, அ.தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் வேட்பாளராக கருதி தேர்தல் பணியாற்ற வேண்டும். 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 இடைத்தேர்தல் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...