நீலகிரி : தேயிலை தோட்டத்தில் துரித வளர்ச்சி பருவமான ஏப்ரல் இறுதி வாரத்தில், மொத்த பரப்பளவில் 25 சதவீதம் கவாத்து அல்லது வீச்சு 'புரூனிங்' செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இத்கு தொடர்பாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தேயிலையின் துரித வளர்ச்சி பருவமான, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மகசூல் கணிசமாக அதிகரிக்கும். சிறு விவசாயிகள் தங்களது தேயிலையின் மொத்த பரப்பளவில் இருந்து கிடைக்கும் மகசூலை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்வதால், தொழிற்சாலைகளில் அளவுக்கு அதிகமாக, தயாரிக்கப்படும் தேயிலை தூளின் தரம் பாதிக்கப்படுகிறது. தேயிலை தொழிற்சாலைகள் இரவு, பகலாக தேயிலை தூள் தயாரிப்பில் ஈடுபட்டு சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றன. தயாரிக்கப்பட்ட தேயிலை தூள் அளவு கணிசமாக உயர்வதால், அதனுடைய தேவை குறைந்து தேயிலை சந்தையில் விற்பனை சராசரி விலையும் குறைந்து விற்கப்படுகிறது.
இதனால், மகசூல் அதிகரித்தும், உற்பத்தி உயர்ந்தும், சராசரி விலையும், பசுந்தேயிலையின் விலையும் அதிகரிக்காமல் தேயிலை தொழில் பின்னடைவை நோக்கி செல்கிறது. இதனால், ஆண்டுதோறும் ஏப்., மாதத்தில் இருந்து, தேயிலை தோட்டத்தின் மொத்த பரப்பளவில் 25 சதவீத பரப்பளவை புரூனிங் அல்லது வீச்சு புரூனிங் செய்து துரித வளர்ச்சி பருவங்களில் நிர்வகித்தல் வேண்டும்.
துரித வளர்ச்சி பருவ காலங்களை நிர்வகிக்கும் நோக்கில், இந்த முறையை செயல்படுத்துவதால், தடையில்லாமல் சிறுதேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதுடன், தேயிலை தூளின் தரமும் உறுதி செய்யப்படுகிறது. தேயிலை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் தேயிலை தூளின் கொள்ளளவும் அதிகரிக்காமல், விற்பனை விலையில் ஏற்றம் ஏற்பட வழிவகை செய்யப்படுகிறது.
இதனால், பசுந்தேயிலைக்கும் நிலையான விலை கிடைக்கும், இவ்வாறு பால்ராஜ் கூறியுள்ளார்.