கோவை முத்தூட் மினி பைனான்ஸில் 814 சவரன் நகை கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை

கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கோவை : ராமநாதபுரம் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை அந்த நிறுவனத்தில் பணியில் ரேணுகா மற்றும் திவ்யா என்ற இரண்டு பெண் ஊழியர்கள் இருந்தனர். 



அப்போது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து பெண் ஊழியர்கள் இருவரையும் தாக்கி நகை பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார். முகமூடி அணிந்து வந்த நபர் தாக்கியதில் மயக்கம் அடைந்த பெண் ஊழியர்கள், சம்பவம் குறித்து தங்கள் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முத்தூட் நிறுவனம் மற்றும் கீழே இருந்த அரிசி கடை ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில், முகமூடி அணிந்த நபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இன்று காலை அந்நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொள்ளையில் வெளியாட்கள் ஈடுபட்டு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என போலீசார் சந்தேகின்றனர். சரியாக நகை இருக்கும் இடம் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பதால், இந்த இடம் குறிந்து அறிந்தவர்களாகதான் இருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதைத்தொடர்ந்து, தாக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்களையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறை துணை ஆணையர் பெருமாள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அந்த நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட்டப்பகலில் பிரபலக் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...