உதகையில் கோடை சீசன் தொடக்கம் : மலை தோட்ட காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மலை தோட்ட காய்கறிகளை வாங்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மலை தோட்ட காய்கறிகளை வாங்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 



இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சீசனை நம்பி பல்வேறு தரப்பு மக்கள் சுற்றுலா தொழிலை செய்து வரும் நிலையில், மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கோஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகளை சாலையோரங்களில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை சுத்தப்படுத்தி வைத்து வியாபாரம் செய்து வருவதால், உதகை நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இவை பெரும்பாலும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்படுபவை என்பதால், இவற்றை வாங்குவதில் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இத்தொழிலை செய்து வரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்த வருமானம் போதுமானதாக உள்ளதாக கூறுகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...