Exclusive: சூலூர் இடைத்தேர்தல் : புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் குமுறல் - சமாதான முயற்சியில் தி.மு.க

சூலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளான்றே பரப்புரையை துவக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவை மாவட்ட தி.மு.க. – காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை கோவை மாவட்ட தி.மு.க. புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.



சூலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளான்றே பரப்புரையை துவக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவை மாவட்ட தி.மு.க. – காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை கோவை மாவட்ட தி.மு.க. புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது சூலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி. மனோகரன், அ.தி.மு.க. வேட்பாளர் கனகராஜிடம் தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தி.மு.க. களமிறங்கியுள்ள நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறது. ஆட்சியை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் என்பதால் தி.மு.க. – அ.தி.மு.க. நேரடியாக மோதுகிறது. 

காங்கிரஸ் தொண்டர்கள் குமுறல்

கடந்த தேர்தலில் எதிர்தரப்பில் இருந்த இடதுசாரிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், இம்முறை தி.மு.க. அணியில் சேர்ந்துள்ளன. கடந்த தேர்தலை போல, காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியை கோவை மாவட்ட தி.மு.க. புறக்கணித்து வருவதாக அக்கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மனுத்தாக்கல் 

வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்த போது, காங்கிரஸ் பிரதிநிதிகளை உடன் அழைத்து செல்லாதது, இதை உறுதிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் சமூக வலைதள பதிவுகளில், “திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியையும் அழைத்திருந்தது. வேட்புமனு தாக்களுக்கு சென்ற காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை திருப்பி அனுப்பி உதாசீனப்படுத்தி இருக்கிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காங்கிரஸ் தலைவர் சோனியா ராகுல் காந்தி அவர்களின் படங்களை கண்ணுக்கு தெரியாத அளவில் இருக்கிறது. அதே போல, வாக்கு சேகரிக்க அச்சிடப்பட்டிருந்த நோட்டீஸில், அச்சடிக்கப்பட்ட வாக்குறுதி எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. தி.மு.க. அதை வாக்குறுதியாக மனுத்தாக்கல் கொடுக்கிறது. கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கும் தி.மு.க. நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும்” என பதிவிட்டு குமுறல்களை வெளிப்படுத்தினர்.

தி.மு.க.வின் சமாதான முயற்சி

காங்கிரஸ் கட்சியின் சூலூர் தேர்தல் பணிக்குழு கூட்டம் கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கோவை வடக்கு தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களை சமதானப்படுத்தும் வகையில், சூலூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் எ.வ.வேலு மற்றும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி தி.மு.க. துண்டிற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி துண்டினை தோளில் அணிந்தபடி பங்கேற்றனர்.

அப்போது பேசிய சஞ்சய்தத், “காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மனநிலை எனக்கு நன்றாக தெரியும். இங்குள்ள பிரச்சனையும் தெரியும். கூட்டணி கட்சிகளுக்குள் சில மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆனால், அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். முதன் முதலாக ராகுல் காந்தியை பிரதமராக அமர செய்வோம் என மேடையில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எமது நன்றி. நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியினர் முழுமனதோடு செயல்பட வேண்டும்,” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, “வேட்பு மனுத்தாக்கலின் போது நடந்த சம்பவம் எதேச்சையாக நடைபெற்றது. காங்கிரஸ் தி.மு.க. வேறு வேறு அல்ல. அச்சம்பவத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இரு கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். பா.ஜ.கவுக்கு எதிராக நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். சில சங்கடங்கள் வந்தாலும் கூட்டணி கட்சியினர் அனுசரித்து செல்ல வேண்டும்,” என்றார்.

காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உடனடியாக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரை அழைத்து கூட்டம் நடத்தி சமதானப்படுத்தும் முயற்சியில் தி.மு.க. இறங்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் ஏற்பட்டுள்ள மன விரிசல், உறவு விரிசலாக மாறி வெற்றியை பாதிக்கக்கூடாது என தி.மு.க. நினைக்கிறது. 

இரண்டு கட்சி தொண்டர்களுக்குமான இடைவெளி அதிகரிக்குமா..?, அல்லது மனங்களும், அணிகளும் இணைந்து செயல்படுமா..? என்பது தேர்தல் களத்தில் தெரியவரும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...