கோவை : பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது.
கோவை : பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது.

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது போலீஸார் அடிதடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில், பார் நாகராஜை தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். இதனிடையே, கைதானவர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய சோதனையில், செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அடிதடி வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்து சி.பி.ஐ. இன்று முதல் விசாரணையை தொடங்கியது.