கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,500 அரசு ஊழியர்களுக்கு நாளை முதற்கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறுகிறது.

கோவை மாவட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 8 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 1,500 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி நாளை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "பயிற்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, ஒப்புகை சீட்டு இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் பயிற்சிகளை வழங்குவார்கள்," என்றனர்.