கோவை : கோவையில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம் பாளையம் கிராமம். இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி தண்டபாணி (65) என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் மாலையில் கோவிலின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கோவிலின் உள்ளே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, உடலில் ஏற்பட்ட வலியால் துடித்த குழந்தையை பார்த்த பெற்றோர், சிறுமியை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சிறுமியின் தாய் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பெற்று கொண்ட காவல் ஆய்வாளர், சம்பவம் பற்றி விசாரித்து குற்றத்தை உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரித்து, கோவில் பூசாரி தண்டபாணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.