மதுரை : குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்காக ஜே.சி.பி. இயந்திரங்களை வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால், தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், மாநில அரசும் நீர்நிலைகளைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருவதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரத்தை வாங்கி நீர்நிலைகளை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பயன்படுத்தி வருகிறது. இதனை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.