வெளிர் மஞ்சள் வண்ணத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு அறிமுகம்

எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் கூடிய வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

எல்லோரா ஓவியம், காந்தி படத்துடன் கூடிய வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. 

 

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது. 

தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. 

மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும், எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...