ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை : விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது குடும்பத்தின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.


கோவை : விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது குடும்பத்தின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. 

கடந்த ஏப்ரல் 20-ம் தேதியன்று பழனிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த எதிர்பாராத சாலை விபத்தில் சிவப்பிரகாசம் (45) என்பவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. பின்னர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவமனையின் நெருக்கடி நிலைக் கண்காணிப்புக் குழுவும், நரம்பியல் மருத்துவர்களும் இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும், சிகிச்சை பலனின்றி சிவப்பிரகாசத்திற்கு மூளைச்சாவடைந்தது. மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கண்டறியும் 'அப்னோ டெஸ்ட்' பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மருத்துவர் குழு, இறுதியில் அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து, சிவப்பிரகாசத்தின் நிலையையும், உடல் உறுப்புதானம் பற்றியும் அறிந்த குடும்பத்தினர், அவரது உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். 

சிவப்பிரகாசத்தின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றைத் தானமாக வழங்குவதன் மூலம் மற்றவர்களின் வாழ்வில் நன்மை செய்ய முடியும் என்பதால், உறுப்பு தானத்துக்கான தமிழக அமைப்பின்(TRANSTAN) அனுமதி பெறப்பட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரு நோயாளிகளுக்கு அவரது கல்லீரலும், சிறுநீரகமும் பொருத்தப்பட்டன. கண்கள் கோவையில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...