கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - நீலகிரி இடையே கூடுதலாக சிறப்பு மலைரயில் இயக்க போதிய என்ஜின்கள் இல்லை : தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்

கோவை : போதிய என்ஜின்கள் இல்லாததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி இடையே கூடுதலாக கோடைகால சிறப்புமலை ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை : போதிய என்ஜின்கள் இல்லாததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி இடையே கூடுதலாக கோடைகால சிறப்புமலை ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா தலமான நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தபடி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீலகிரி மலையின் அடிவாரப்பகுதியான மேட்டுப்பாளையம் வரும் சுற்றுலாப் பயணிகள் உலக பாரம்பரிய சின்னமான மலைரயிலில் பயணித்தே ஊட்டி செல்ல விரும்புகின்றனர். இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இது தவிர கூடுதலாக வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு மலைரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு உதகைக்கு பகல் 12 மணிக்கு சென்றடையும். இதே ரயில், ஞாயிற்றுக்கிழமை உதகையில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தடையும். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், இந்த சிறப்பு ரயிலை வாரத்தில் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சிறப்பு ரயில் இயக்கு போதிய அளவில் ரயில் என்ஜின்கள் இல்லாததால், சிறப்பு ரயில் இயக்க முடியாத நிலை உள்ளதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலை இயக்க மொத்தம் 8 என்ஜின்கள் உள்ளன. இதில், நிலக்கரியில் செயல்படும் இரண்டு என்ஜின்கள் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் பழுதாகி உள்ளது. மற்றொரு என்ஜின் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனைக்கு பழுது நீக்க அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தற்போது செயல்பாட்டில் நான்கு என்ஜின்கள் மட்டுமே உள்ளது. இந்த ரயில் என்ஜின்கள் மாற்றி மாற்றி தான் தற்போது வரை மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலாக சிறப்பு ரயில் இயக்க தேவையான ரயில் பெட்டிகள் இருந்தும் என்ஜின் இல்லாததால் மலைரயில் சேவையினை அதிகரிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது,” என தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...