விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும் : சூலூர் தி.மு.க. வேட்பாளர் வாக்குறுதி

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக இருக்கும் விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைத்து, விசைத்தறி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக இருக்கும் விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைத்து, விசைத்தறி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.



கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி இன்று சின்னியம்பாளையம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சின்னியம்பாளையம் பி.என்.பி. காலனியில் தொடங்கிய பிரச்சாரம், அரிஜன காலனி, ஜெமினி சந்து, வெங்கிட்டாபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. வாகனம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், வீடு வீடாக சென்றும் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து பொங்கலூர் பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் முன்பாக பிரச்சாரம் மேற்கொண்ட போது பொங்கலூர் பழனிச்சாமி கூறியதாவது :- மே மாதம் 19ந் தேதி நடைபெறுகின்ற தேர்தல் எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கின்றதோ, அப்போதெல்லாம் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளது. இந்த திருச்சி சாலையை விரிவாக்கம் செய்த பெருமை தி.மு.க.வையே சேரும். மேலும், செம்மொழி மாநாடு மூலம் கோவைக்கு 1,000 கோடி ரூபாயில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தார். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.



இந்த தொகுதியில் உள்ள முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்கி விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும். தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் சிறப்பான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூலூர் தொகுதியில் நிச்சயமாக தி.மு.க. வெற்றி பெறும், என பொங்கலூர் பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...