சென்னை : சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்காளர்கள் பலர் தங்களது டுவிட்டரில் தங்களது அடுத்த வாக்கு ரஜினிக்கே என டுவிட் செய்திருந்தனர். இதனால், டுவிட்டரில் சென்னை டிரெண்டிங்கில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியது. இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்மொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், விடுபட்ட பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் மன்றம் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.