ஆனைகட்டி அருகே மீண்டும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கோவை : கோவை மாவட்டம் செம்புக்கரைபழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, மீண்டும் வீடு ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் செம்புக்கரைபழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, மீண்டும் வீடு ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த காட்டு யானை, சி. வெள்ளிங்கிரி என்பவரின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஆனைகட்டி அருகே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானையினால், வீடு சேதமடைவது இது 2-வது முறையாகும்.

வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...