தீவிரவாத தாக்குதல் குறித்து பொய்யான தகவல் கொடுத்த லாரி ஓட்டுநரை கைது செய்த கர்நாடக போலீசார்

கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.

கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் கொடுத்தார். இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில டி.ஜி.பி.க்களுக்கு கர்நாடாக மாநில டி.ஜி. மற்றும் ஐ.ஜி.பி. ஆகியோர் தகவல் அனுப்பியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக, தமிழகம், 

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் ரயில்களில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கர்நாடகா போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தீவிரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக பொய்யான தகவலை கொடுத்த லாரி ஓட்டுநரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...