கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கர்நாடகா ஐ.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை : தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கர்நாடகா ஐ.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட மாநில டி.ஜி.பி.க்களுக்கு கர்நாடாக மாநில டி.ஜி. மற்றும் ஐ.ஜி.பி. ஆகியோர் தகவல் அனுப்பியுள்ளனர்.
ஐ.ஜி.பி. அனுப்பியுள்ள கடிதத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் அளித்துள்ள தகவலின்படி, தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கும் ரயில்களில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

UPDATE : 27/04/2019 09.00AM
Click Here : தீவிரவாத தாக்குதல் குறித்து பொய்யான தகவல் கொடுத்த லாரி ஓட்டுநரை கைது செய்த கர்நாடக போலீசார்