இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது : கோவையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் குமுறல்

கோவை : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் தெரிவித்துள்ளார்.

கோவை : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய உளவுத்துறை ஏற்கனவே இலங்கைக்கு தகவல்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கோவையில் அர்ஜுன் சம்பத் மற்றும் சில இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் தொடர்ந்து வெளியானது. 

இந்த நிலையில், இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிக் ,தங்களை வேண்டுமென்றே தீவிரவாதமாக சித்தரிக்க தேசிய முகமை செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது : இலங்கையில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால், வேண்டுமென்றே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் நற்பெயர் எடுக்க எங்களை பலியாக்குகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கும், எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால், தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம். எனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான், அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...