20 நாட்களாக இருளில் கிடக்கும் யானைகள் நடமாட்டம் உள்ள பந்தலூர் : ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டும் மின்வாரியத்துறை அதிகாரிகள்

நீலகிரி : தமிழகம் - கேரளா எல்லையான பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடரும் மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி : தமிழகம் - கேரளா எல்லையான பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடரும் மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பந்தலூர் மின்வாரிய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் படைச்சேரி, சேரங்கோடு, சேஜ்ரம்பாடி டான்டீ மற்றும் சின்கோனா பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளன. இதனால், ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் இரவு 7 மணிக்கு மேல் ஊருக்குள் செல்வதில்லை. இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக இப்பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால், தெருவிளக்குகள் எரியாததுடன், வீடுகளிலும் மின்விளக்குகள் எரியாத நிலையும் நிலவுகிறது. மேலும், குடிநீர் கிணறுகளில் மோட்டார் இயக்க முடியாமல், குடிநீர் சப்ளையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து கிராம மக்கள் பந்தலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். “போதிய பணியாளர்கள் இல்லை. உடனே பழுதுகளை நீக்க இயலாது,” என சில மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...