கோவை : கோவையில் முதல்முறையாக வரும் மே 1-ம் தேதி 'ஜாலம்' என்னும் இன்னிசை நேரலை நிகழ்ச்சி குமரகுரு கல்லூரியில் நடக்கிறது.

கோவையில் இசை மீது ஆர்வம் கொண்டவர்களுக்காக டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் குமரகுரு கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோவையில் சர்வதேச அளவிலான இசை நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த இசை நிகழ்ச்சியில், சன்சைன் ஆர்க்கெஸ்டிராவுடன், மண்டோலின் மாஸ்டிரோ புகழ் மறைந்த யு. ஸ்ரீனிவாசிடம் இசை பயின்ற ஸ்ரீ அரவிந்த் பார்கவ் இணைந்து இசை மழையை வழங்க உள்ளனர். ஏ.ஆர். ரகுமான் அறக்கட்டளைக்குட்ட சன்சைன் ஆர்க்கெஸ்டிராவின் மூலம் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக இசை கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற, தொடர்புக்கு அன்னலட்சுமி, கலை அறிவியல் கல்லூரி சாலை (9894947810), லாவன்யா கிராஃப்ட் ஷாப் (9994494992), டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் (9944954789) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.