கோவை : அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால், டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அ.தி.மு.க. எடுத்துள்ளதாக சூலூர் இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை சூலூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சூலூர் இடைத்தேர்தலில் நீண்ட நாளைக்கு பின்னர் தி.மு.க. இங்கு போட்டியிடுகின்றது.
முக்கியமான காலகட்டத்தில் இந்த தேர்தல் நடத்தப்படுவதால், ஆளும் கட்சியால் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றிபெறும் நிலை இருப்பதால், ஆளும்கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க. கட்சியின் கொறடாவே வலியுறுத்துள்ளார். தி.மு.க. அணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் இந்த நடவடிக்கையினை அவர்கள் எடுத்துள்ளனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். 1.5 லட்சம் விசைத்தறிகளில் சுமார் 30 ஆயிரம் விசைத்தறிகள் ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளது. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை ஆகாவளி திட்டமாக முதலமைச்சர் மாற்றி இருக்கின்றார். இந்தத் திட்டத்தில் பம்ப் செய்து தண்ணீரை கொண்டு வருவது சாத்தியமில்லை.
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை தொடங்கி விட்டதாகக் கூறி மக்களை அ.தி.மு.க.வினர் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
சூலூர் தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. பெரும்பாலான இடங்களில் முதியோர் பென்சன் முறையாக கிடைக்கப் பெறுவதில்லை. 100 நாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதால், மக்கள் கொதி நிலையில் இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. கட்சி இரண்டாக, மூன்றாகப் பிரிந்து, இப்போது மத்திய அரசின் கைப்பாவையாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதற்கு முன்பு இருந்த சட்டமன்ற உறுப்பினர் சூலூர் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சி பணிகளை இதுவரை எதுவும் செய்யவில்லை, என்றார்.
தொடர்ந்து, நீட் தேர்வை தி.மு.க. ஆதரித்தாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- தி.மு.க. மாநில சுயஆட்சியை எப்போதும் விட்டுக்கொடுக்காது. இது தவறாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும், விசைத்தறியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விசைத்தறிக்கு பூங்கா சூலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் - கோவை 4 வழிச்சாலை அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கோரிக்கைகள் வந்தால், அவரது உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த தலைமையிடம் வலியுறுத்தப்படும்.
மக்களுக்கு பரிச்சயம் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என மக்களுக்கு அறிமுகம் உள்ளதால் சூலூரில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. மேலும், விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தொடர்ந்து எதிர்ப்போம். விளைநிலங்களில் புதைவட தடமாக மின் கம்பிகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
மேலும், வேட்புமனு தாக்கலின் போது விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மாற்று வேட்பாளரையும் கணக்கில் எடுத்து அவர்கள் தவறாக புரிந்து கொண்டனர் என்றும், பின்னர் நிலையை அவர்களுக்கு விளக்கி சொல்லி விட்டோம் என பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.