கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் : வாளையார் மனோஜ் பரபரப்பு பேட்டி

நீலகிரி : கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளில் ஒருவான வாளையார் மனோஜ் பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளில் ஒருவான வாளையார் மனோஜ் பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை, இந்த வழக்கு விசாரணையைக் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 



இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையார் மனோஜ், "கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எடப்பாடி ஆட்களான இரு மலையாளிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்," என்றார். ஏற்கனவே, கோடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வாளையாறு மனோஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், முதலமைச்சரின் அடியாட்கள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 



இதனிடையே, கோடநாடு வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...