கோவை : உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், விதிகளை மீறி விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விளம்பரப் பல்தொழில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களுக்கான ஐ.என்.டி. என்ற குறியீடு கொண்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை தமிழகத்தில் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை திட்டத்தின்படி "ஐ.என்.டி.' என்ற குறியீடு கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில், குறிப்பாக கோவையில் இந்த வியாபாரத்தை சட்டவிரோதமாக செய்து வருகிறது. இப்படி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில், இந்த சட்டவிரோத தயாரிப்புகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஈடுபடவில்லை என்பதையும் காவல்துறைக்கு தெரிவித்துக் கொள்கிறோம், என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.