காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உதவுவதாகக் கூறி நிதி திரட்டி மோசடி : கர்நாடகா வனத்துறை தலைமை அதிகாரி குற்றச்சாட்டு

நீலகிரி : பந்திபூர் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க வனத்துறையினருக்கு உதவுவதாகக் கூறி நிதி பெற்று ஏமாற்றுவதாக கர்நாடக வனத்துறையின் தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீதர் புனதி கூறியுள்ளார்.

நீலகிரி : பந்திபூர் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க வனத்துறையினருக்கு உதவுவதாகக் கூறி நிதி பெற்று ஏமாற்றுவதாக கர்நாடக வனத்துறையின் தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீதர் புனதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இதுவரை எந்தவிதமான உதவிகளையும் வனத்துறை கோரவில்லை. பெரும்பாலும் தரைப்பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால், 2 முறை மழை பெய்யும் பட்சத்தில் நிலைமை சீரடைந்துவிடும். லந்தனா போன்ற செடிகள் மெல்லமெல்ல முளைக்க தொடங்கியுள்ள நிலையில், உள்ளூர் மக்களின் உதவியுடன் மூங்கில் மரத்தின் விதைப் பந்துகளின் மூலம் தீவனக் காடுகளை உருவாக்கி வருகிறோம்.



காட்டுத் தீ உள்ளிட்ட அவசர காலங்களின் போது, வெளியாட்கள் யாரையும் நாங்கள் அனுமதிப்பில்லை. காட்டுத் தீ மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறமைமிக்க உள்ளூர் கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களை மட்டுமே உதவிக்கு சேர்த்துக் கொள்கிறோம். இருப்பினும், எங்களின் வழிகாட்டுதலின் பேரில், வெளியாட்களின் மூலம் பலமுறை காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பலர் எங்களது நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொண்டு சென்று விடுவார்கள். அவர்களை நாங்கள் விருந்தாளிகளைப் போல நடத்தமாட்டோம்," என்றார். 

பந்திபூர் புலிகள் வன பாதுகாப்பிற்குட்பட்ட காடுகளை மீண்டும் செழிமையாக்கும் முயற்சியாக பெங்களூரூ நகரின் பல பகுதிகளில் விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒரு சில அமைப்புகள், வனத்துறையினருக்கு உதவும் வகையில் பொதுமக்களிடம் இருந்து நிதிகளை சேகரித்து வருகின்றன. 

"காட்டுத் தீ ஏற்பட்ட வனப்பகுதிகளில் இதுவரை எந்தவொரு விலங்குகளின் சடலமும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, இந்தக் காட்டுத் தீ விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளையும் தன்னார்வலர்கள் கண்டிருக்க முடியாது. ஆனால், சில மர்ம நபர்கள் காட்டுத் தீயினால் வனங்களில் உள்ள மரங்கள் மற்றும் விலங்குகள் உயிரிழந்துவிட்ட. ஆகவே, வனப்பகுதிகளில் விதைப்பந்துகள் மூலமும், நாற்றுகளை நடுவதன் மூலமும் மீண்டும் பசுமையை புகுத்த வேண்டும் என வதந்திகளை பரப்பி வருகின்றனர்," என்கிறார் கர்நாடக வனத்துறையின் தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீதர் புனதி. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...