டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான வி.டி. கலைச்செல்வன் (விருதாச்சலம்), இ. ரத்தினசபாபதி (அறந்தாங்கி) மற்றும் ஏ. பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய மூவரும் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். மேலும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தற்போது, அ.தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். எம்.எல்.ஏ. கருணாஸ் அவ்வப்போது அரசுக்கு ஆதரவாகவும் இருப்பதால், 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து, கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரிடமும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க உள்ளார். 4 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை இன்றி இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும்.