திருப்பூரில் குளம்போல தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீர் : திருப்பூர் மாநகராட்சியைக் கண்டித்து சாக்கடையில் இறங்கி போராட்டம்

கோவை : சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குளம்போல் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கோவை : சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக குளம்போல் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு, பவானி நகர் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனிடையே, அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளதோடு, சாலையில் ஆறு போல் செல்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதுமட்டுமில்லாமல், நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பலருக்கு தொடர்ச்சியாக இருமல், சுவாசக் கோளாறு போன்ற வியாதிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



கடந்த 5 வருடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பவானி நகர் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மக்களின் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள், போராட்டங்கள் நடத்தும்போது தான் சம்பவ இடத்திற்க்கு வந்து பிரச்சனையை சரி செய்து தருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 



இந்த நிலையில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் அலட்சியம் காட்டி வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் 4 அடி வரை ஆழமுள்ள தேங்கியிருந்த சாக்கடை கழிவுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு சமரசம் செய்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...