50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி வரும் புயல்

கோவை : 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோவை : 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :- பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது. முன்னதாக, கடந்த 1966-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குப் பிறகே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும், என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...