சூலூர் இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல்

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


கோவை : சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு அரசியல் தலைவர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது, தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு, ஆதிபேரவை நிறுவனர் அதியமான், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரிமியர் செல்வம், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், தி.மு.க. பிரமுகர் மன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது, 5 பேர் உடன் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றேன். தி.மு.க. சூலூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும்," என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...