கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 300 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கோவை மாநகராட்சி பறிமுதல் செய்தது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கோவை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருக்கிறதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் கடந்த 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 330 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளிடம் மொத்தம் ரூ. 1,59,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் உயர் அதிகாரி கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலினால் எங்கள் அதிகாரிகள் சோதனைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனெனில், பெரும்பாலான அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்த சமயங்களில் சிறு, குறு தொழிலாளர்கள் அதிகளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்தில் கொண்டு வந்து விட்டனர். தேர்தலுக்கு முன்னதாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது, தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக மீண்டும் சோதனை நடத்தியதில் ஏராளமான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்களும், வியாபாரிகளும் நினைத்தால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும். எங்களால் முடிந்தவரை அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மேலும், எங்கயாவது பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பின், அது தொடர்பாக பொதுமக்களே சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்," என்றார்.
பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் கோவை மாநகராட்சியுடன் ராக் அமைப்பும் இணைந்து பணியாற்றி வருகிறது. இது தொடர்பாக ராக் அமைப்பைச் சேர்ந்த ரவீந்திரன் கூறியதாவது :- தற்போது பெரிய வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டன. ஆனால், சிறு வணிகர்கள் மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் கொள்ளவில்லை. ஏனெனில், இந்த தடை சட்டம் கொஞ்ச காலத்திற்கு பிறகு, திரும்பப் பெறப்பட்டு விடும் என எண்ணுகிறார்கள். ஆனால், அரசு மற்றும் அதிகாரிகளும் பிளாஸ்டிக் தடையை முழுவதும் அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். இந்த எண்ணங்களை மாற்றிக் கொண்டு, பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அதேவேளையில், பெரும்பாலான கேட்டரிங் கான்டிராக்டர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கண்காணித்து, தடுத்து நிறுத்த வேண்டும். கோவை இந்த விவகாரத்தில் கோவை மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்," என்றார்.