கோவை : கோடை கால பயிரான செண்டுமல்லி, அதிக விளைச்சலும், அதற்கேற்ற விலையும் கிடைப்பதால் மேட்டுப்பாளையம் மலர் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்தளவு தண்ணீர் தேவையுள்ள குறுகிய கால பயிரான செண்டுமல்லி அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிகம் தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்வதற்கு பதிலாக, குறுகிய காலத்தில் குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிர்களை பயிரிடுவதால் வறட்சியை சமாளிக்க இயலும். மேட்டுப்பாளையம் வட்டத்தில் இவ்வாண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால், அதிக பாசனம் தேவைப்படும் பயிர்களை பயிரிடாமல், 60 நாள் பயிரான செண்டுமல்லியினை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செண்டுமல்லி செடிகளுக்கு குறைந்தளவு நீரே போதுமானது என்பதால், இவை கோடைக்கு ஏற்ற பயிராக உள்ளது. சொட்டு நீர் பாசனம் செய்தால் மேலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என தெரிவிக்கும் விவசாயிகள், செண்டுமல்லியினை தனியாகவும் நடவு செய்யலாம் என்றும், பிற விவசாய பயிர்களோடு ஊடு பயிராகவும் நடவு செய்யலாம் என்றும் கூறுகின்றனர். மேலும், குறுகிய கால பயிர் என்பதால் பயிரிட்ட குறைந்த நாட்களிலேயே அறுவடை செய்து பலன் பெறலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர். தற்போது, மஞ்சள் செண்டுமல்லி கிலோ ரூ. 100 வரையிலும், சிகப்பு செண்டுமல்லி கிலோ ரூ. 70 வரையிலும் விலை போகிறது. கோடை காலத்தில், செண்டுமல்லியின் விளைச்சலும் அதிகரித்து, நல்ல விலையும் கிடைப்பதால் இப்பகுதி மலர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.