பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை விவகாரம் : குற்றவாளிகள் 5 பேர் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதானவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார், தற்போது கூடுதலாக பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதானவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார், தற்போது கூடுதலாக பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர். மேலும், இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் இணைந்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதையும், அதனை படம் பிடித்து வைத்து தொடர்ந்து வன்கொடுமை சம்பவங்களை நடத்தியதையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து, கூடுதலாக பாலியல் வன்கொடுமை (கற்பழிப்பு) பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...