நீலகிரி : நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பழுதடைந்துள்ள பெரும்பாலான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி விட்டனர். வரும் மே மாதம் முடியும் வரை சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிகளவு வந்து செல்வார்கள். சாலை பழுதடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புழுதியின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அனைத்து சாலையோரங்களிலும் கேபிள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். தற்போது ஒருசில சாலைகளில் மட்டும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தே காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். முதற்கட்டமாக, அனைத்து பழுதடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும். மே மாதம் தொடங்கும் முன் அனைத்து சாலைகளையும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.