மேட்டுப்பாளையம் - குன்னூர் ஒரு வழிப்பாதை முறையைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு

கோவை : கோடை சீசனுக்காக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கோவை : கோடை சீசனுக்காக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடக்க உள்ள கோடை விழாவினை முன்னிட்டு, உதகையில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியே செல்லும்படி ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் லாரிகளில் பகல் நேரத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளைக் கொண்டு சேர்க்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு முன் பணியில் இருந்த மாவட்ட காவல் அதிகாரி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு வழிப்பாதையாக அறிவித்திருந்தார். இதனால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தும், பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் கொண்டு சேர்க்க முடிந்தது. 



ஆனால், தற்போது லாரிகள் மூலம் வரக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இரவு 9 மணிக்கு மேல் கல்லார் பகுதியில் இருந்து லாரிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், லாரிகள் பகல் நேரத்தில் கல்லார் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வழங்க வேண்டும், என லாரி உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த மனு மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...