கோவையில் 34-வது அரசு பொருட்காட்சி இன்று தொடக்கம்

கோவை : கோவையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : கோவையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார்.



தமிழக அரசு சார்பில் வருடந்தோறும் அரசு பொருட்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு கோவையில் 34-வது அரசு பொருட்காட்சியை செய்தித்துறை இயக்குநர் சங்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, சமூகநல துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, வேளாண் துறை, பள்ளிக் கல்வி துறை உள்ளிட்ட 27 அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக ராட்சத ராட்டினம், டோரா டோரா, கப் & சாசர் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.



இன்று முதல் 45 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பொதுமக்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு ரூ. 15-ம், குழந்தைகளுக்கு ரூ. 10-ம் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, தனியார் விற்பனை நிலையங்களும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியானது, குழந்தைகளுக்கு கோடை விடுமுறையை குதூகலமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...