கோவை : வெள்ளியங்கிரி மலை யாத்திரை மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி என்ற இடத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (ஏப்.,20) ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியிங்கிரி மலையில் யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் மலையேறினர். அவர்கள் 5-வது மலையை அடைந்த போது மூச்சுத்திணறல் காரணமாக வெளிநாட்டுக் குழுவினரைச் சேர்ந்த முதியவர்,எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
பின்னர், வனத்துறையினர் உடலை மலையில் இருந்து கீழ்பகுதிக்கு எடுத்து வந்தனர். மேலும், இது தொடர்பாக ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரவுல்டஸே மஸேனா (59) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் பாண்டிச்சேரியில் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி யாத்திரை மேற்கொண்ட போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 19-ம் தேதி சென்னையை சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.