தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் கோவை மாவட்டம் முழுவதும் தொடரும் பறக்கும் படையினரின் சோதனை

கோவை : மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையிலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை : மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையிலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மக்களவை தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் வீடியோ குழுவினர் 20, சோதனை சாவடி குழுவினர் 30, பறக்கும் படையினர் 30 என மொத்தம் 80 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிவுகளுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அந்த ஒரு தொகுதியில் மட்டும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள் என கருத வேண்டாம். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினரின் சோதனை தொடரும். இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 13 கோடி ரூபாய் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டு, அதில் சுமார் 3 கோடி வரை ஆவணங்கள் ஒப்படைத்ததால் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...