சி.ஐ.ஐ சார்பில் ஜி.எஸ்.டி., வருமான வரி தொடர்பான சட்டவிதிமுறை விளக்க மாநாடு

கோவை : இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., வருமான வரி தொடர்பான சட்டவிதிமுறை விளக்க மாநாடு நடைபெற்றது. இதனை வருமான வரித்துறை ஆணையர் வி.எஸ் குமார் தொடங்கி வைத்தார்


கோவை : இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி., வருமான வரி தொடர்பான சட்டவிதிமுறை விளக்க மாநாடு நடைபெற்றது. இதனை வருமான வரித்துறை ஆணையர் வி.எஸ் குமார் தொடங்கி வைத்தார்.



இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பொருளாதார விவகாரம் மற்றும் வரி பிரிவு சார்பில், ஜி.எஸ்.டி., வருமான வரி, நிறுவனச் சட்டங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் மாநாடு, ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. வருமான வரித்துறை ஆணையர் வி.எஸ் குமார் ஐ.ஆர்.எஸ்.,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



இந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல தலைவர் வரதராஜன் பேசுகையில், "சட்டப்படியான முறைகளை நிறுவனங்கள் கையாளுவது அதிக செலவாக இருந்தாலும், அதன்படி, நடக்காமல் இருப்பது அதை விட அதிக செலவை ஏற்படுத்தும். இந்தியா, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால், சர்வதேச அளவிலான சட்டமுறைகளுக்கு இணையான வகையில், நிலைான சட்டங்களை நம் நாட்டிலும் பின்பற்ற வேண்டும். அறிவுசார்ந்த சமுதாயம் உள்ள நாட்டில், சட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. வணிகத்தையும், சட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசியம்," என்றார்.

கோவை மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பின் பொருளாதார விவகாரம் மற்றும் வரி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜி. கார்த்திகேயன் பேசியதாவது :- பல சர்வதேச, இந்திய மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், அந்தந்த நாட்டு வணிக சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறி செயல்பட்டன. ஆனால், அவையெல்லாம் தங்களது மீறலுக்கும், ஏமாற்றதலுக்கும் ஏற்ப வலுவான அபராதங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிறுவன சட்டங்களை அமல்படுத்தும்போது, பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 



உதாரணமாக, கடந்த காலங்களில் நிறுவனங்கள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை கொண்டிருந்தால், ஒரு முழுநேர கம்பெனி செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதுவே தற்போது ரூ. 5 கோடி அல்லது அதற்கும் மேல் முதலீடு உள்ள நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது, கம்பெனி செயலாளர்களின் தேவையை அதிகப்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ள வேண்டிய சவால்களும் ஏற்பட்டுள்ளது. சட்டங்களை பின்பற்றுவதில் எவ்வித பிரச்னைகளும் இல்லை. அவ்வாறு இருக்குமானால், அதற்கான விளக்கங்களையும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

வருமான வரித்துறை ஆணையர் வி.எஸ் குமார் இந்த மாநாட்டின் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது :- வரி செலுத்தும் முறைகளில் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மக்களிடையே ஒரு நிறுவனம் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற வேண்டுமானால், சரியான முறையில் விதிமுறைகளைப் பின்பற்றி வரி செலுத்தி வர வேண்டியது அவசியம். அப்போது தான் தொழிலில் வளர்ச்சியும், வெற்றியும் நிலையானதாக இருக்கும். வாடிக்கையாளர்களிடையே மதிப்பைப் பெற முடியும். இது, நிறுவனத்துக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். விதிமுறைகள், சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை பெற மட்டுமின்றி, தொடர்ந்து வணிக முறைகளையும் பெற வாய்ப்பாக இருக்கும். 

அனைவரும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பது, வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலாண்மை போட்டியை வளர்ப்பதோடு, பணியாளர்களும் நிறுவனத்தில் நிலையாக தொடர்ந்து பணி செய்வர். இது, முறைப்படுத்தப்பட்ட நடைமுறைகள், ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மிக முக்கியமானது. ஒரு நிறுவனமாக செயல்படுதல், விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுதல், தொடர்ந்து அவற்றை பயிற்சி செய்தல், பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உங்களது வணிகத்துக்கும் மிகவும் நலன் பயப்பதாக இருக்கும். நல்ல வணிக நிலையை ஏற்படுத்தும், என்றார்.

கோவை மண்டல இந்திய தொழில் கூட்டமைப்பின் பொருளாதார விவகாரம் மற்றும் வரி பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ் திருமூர்த்தி நன்றி கூறினார். தொடர்ந்து, வருமான வரி, நிறுவனங்கள் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. மற்றும் சைபர் பாதுகாப்பு போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...