உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் : தி.மு.க. வேட்பாளர் பங்கேற்பு

உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு மற்றும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு மற்றும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் சூலூரில் உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு மற்றும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், சூலூர் இடைத்தேர்தல் தி.மு.க. பொறுப்பாளர் ஏ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது :- விவசாயிகள் நிறைந்த மாவட்டமாக திருவண்ணாமலை இருந்தாலும் கூட, கொங்கு மண்டலத்தில் தான் விவசாயம் உருவானது. குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டால், தமிழகம் விவசாயம் நிறைந்த மாநிலம். குஜராத்தில் சிறுதொழில்கள் உள்ளது. அவை அனைத்தும் மோடி ஆட்சி காலத்தில் வரவில்லை. காலம் காலமாக சிறு சிறு தொழிற்சாலைகள் அங்கு இருக்கிறது. மேலும், 

அனைத்து அரசையும் ஒப்பிட்டு பார்க்கையில், கலைஞர் ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தபட்டது. இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தவர் கலைஞர். ஆனால், தற்போது விவசாயிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நிலை மாற வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். பொங்கலூர் பழனிச்சாமி வெற்றி பெற்றால் விவசாயிகள் வெற்றி பெறுவதாக அர்த்தம், என்று தெரிவித்தார். 

முன்னதாக, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து பேட்டியின்போது கூறுகையில், “தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 35 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதேசமயம், காங்கிரஸ் தலைவர் ராகுல் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்றும், ஆண்டுக்கு 72 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இது 30 ஆண்டுகள் விவசாயிகள் கோரிக்கைகளை ராகுல் வாக்குறுதியாக கூறியுள்ளார்.

இதேபோல், தி.மு.க. தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின், விவசாய கடன், வங்கி கடன், நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வோம் என்றும், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும், டோல்கேட் முழுமையாக ஒழிக்கப்படும், கரும்புக்கு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே, தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தருவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...