கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் மீது, கோவை மாநகர காவல் துணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்த டி.ஜி. வாசு (47) என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ. 500 பறித்துச் சென்றதாக பரத் காந்தி (23) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி காவல்நிலையங்களில் பரத் காந்தி மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், கோவை மாநகர துணை ஆணையர் மற்றும் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு தெற்கு உதவி ஆணையர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், இளைஞர் பரத் காந்தியை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.